நிசி அகவல்

ரூ. 60.00
Imprint: 
Aazhi
Price: ரூ. 60.00
பக்கங்கள்: 
80
நிசி அகவல்

என்னை மீறிச்செல்லும் கவிதைகளை கட்டுப்படுத்தாமல் மமகையுடன் இருந்துகொண்டிருந்தேன். ஐன்து கவிதை நூலகள் வந்த பிறகுதான் உணர்ச்சி வேகத்துடன் எழுதப்பட்ட கவிதைகளில் வார்த்தைகள் அநாவசியமாக வந்திருப்பதை கண்டுகொண்டிருக்கிறேன். அதிகப்படியான தேவையற்ற வார்த்தைகளை கருணையற்று நீக்கிவிடும் இதயத்தை இருபது ஆண்டு கால கவிதை அனுபவத்திற்கு பிகுதான் பெற்றிருக்கிறேன்.

ஓரு கவிதை தொடங்கி முடியும்வரை உள்ள சொற்களை ஊன்றிக் கவனித்து அவசியமற்றதை தின்ன முடியாத பழத்தின் கொட்டைகளைப் போல அலட்சியத்துடன் தூக்கி எறிந்துவிடுகிறேன். இப்பொழுது கவிதையின் சுவை தித்திப்பாயிருப்பதை சாசுவத்மாய் நம்புகிறேன். ெழுதப்பச்ச கவிதை ஓரிரு சமயங்களில் கவிதையாய் மாறிவிடுவதும் நிகழாமலுமில்லை என்பதும் ஒரு கவிஞனுக்கான சோகம்தான். காயம்பட்ட ஒரு கவிதைப் பறவையை அப்படியே விட்டுவிட்டு போகாமல் வேண்டிய மருந்தால் காயம் ஆற்றி தலையை கோதி பறக்கவிடுதல்தான் தலையாய வேலையாய் இருக்கவேண்டும்.

இந்தத் தொகுப்பு நிறைவடைகிறபோது உள்ளுக்குள் ஒரு களிப்பு நடனம். இது போன்ற திருப்தி வேறெதில் கிடைத்தாலும் முழுமையாகும் கவிதைகள் பெண்ணில் வீழ்கிற நொடிகளாய் ஆவதில்தான் ஆழ்ந்த கிறக்கம்.

-அய்யப்பமாதவன்-