இரா.செழியன்
திரு. இரா. செழியன் திராவிட இயக்கத்தின் மூத்தத் தலைவர்களில் ஒருவர். இந்தியாவின் தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் மிக முக்கியமானவர். செழியன் 1923 ஆம் ஆண்டு எப்ரல் 28 ஆம் நாள், தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், திரு. வி.எஸ். இராஜகோபால் அவர்களுக்கும் திருமதி. மீனாட்சிசுந்தரம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பட்டுக்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலைக் கல்வியை முடித்தார். அறிஞர் அண்ணாவுக்கு நெருக்கமான செழியன், 1949 இல் தி.மு.கழகத்தை உருவாக்குவதில் முக்கிய yங்கு வகித்தார். இந்கிய அரசியலின் மிகச் சோதனையான காலகட்டமான 1972-77 இல் தி.மு.க.வின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இருந்தார். 1975 நெருக்கடி காலத்தில் ஜனநாயகத்துக்காகப் போராடிய முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்த செழின், பிறகு ஜெயப்பிகாஷ் நாராயண் உருவாக்கிய தேசிய ஒருY்கிணைப்புக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். 1976 இல் ஜனநாயக உரிமைக்கான மக்கள் யூனியனின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 1977-78 இல் ஜனதா கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவராக இருந்த செழியன், அதன் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பின்பு ஜநதா தளத்தில் முக்கியப் பொறுப்புகளை கவித்தார். திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான, மறைந்த தமிழக முன்னாள் நிதி அமைச்சர் திரு. இரா. நெடுஞ்செழியனின் இளவல் ஆவார்.
Main menu
Book Categories
- Politics (1)
