ஆசிரியர்கள்

பின்வரும் துறைகள் தொடர்பான நூல்களை எழுதும் ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வரைகலை நிபுணர்கள், ஓவியர்கள் தேவை.

வெளியீடு துறைகள் இலக்கு வாசகர்கள்
ஆழி இலக்கியம், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், பல்வேறு ஆய்வுத்துறைகள், வரலாறு காத்திரமான நூல்களைப் படிக்கும் தன்மையுள்ள வாசகர்கள். ஆய்வு நோக்கில் அல்லது வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் பரீட்சார்த்த நூல்களை விரும்புகிறவர்கள். பொதுவாக சீரியஸ் வாசகர்கள், சிறுபத்திரிகை வாசகர்கள் என்று அழைக்கப்படுவோரும், இடை நிலை இதழ்களை வாசிப்போரும்.
ஓஷியோ அனைத்து துறைகளும் எளிமையான, சுவாரஸ்யமான நடையில் உள்ள நூல்களை வாசிப்பவர்கள். வெகுஜன வாசகர்கள்.
பேப்பர் போட் புக்ஸ் கதைகள், பாட்டுகள், செயல்திறன் நூல்கள், அறிவியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, பொது அறிவு உள்பட அனைத்துத் துறைகளும் குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், பதின் வயதினர்

உங்கள் படைப்புகள் குறித்த சுருக்க விவரத்தை முதலில் எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்புங்கள். அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம். அவற்றை எமது எடிட்டர் குழு ஏற்கும்பட்சத்தில் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

எமது அனுமதி பெறாமல் ஒருபோதும் முழு நூலை அனுப்பவேண்டாம். மேலும், ஒருபோதும் மூலப் பிரதியை அனுப்பாதீர்கள். ஒளிப்பட நகலையோ அல்லது மென்பிரதியை PDF ஆகவோ மட்டும் அனுப்புங்கள். அனுப்பப்படும் நூல்களை நாங்கள் ஏற்பதும் மறுப்பதும் முழுமையாக எமது உரிமைக்கு உட்பட்டதே.

மேலும், ஏற்புக்காக சமர்ப்பிக்கப்படும் பிரதிகளை நாங்கள் திருப்பி அனுப்புவதில்லை.

அசல் படைப்புகளுக்கு ராயல்டி அளிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்புகளுக்கும் பிற பங்களிப்புகளுக்கும் (படங்கள், ஓவியங்கள் போன்றவை) ஒரு தடவையில் முழு தொகையும் அளிக்கப்படும். எந்த சமர்ப்பிப்புக்கும் முன்பணம் வழங்கப்படுவதில்லை.

மேலதிக விவரங்களுக்கு அழைக்க: 044 2372 2939

சமர்ப்பிப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி

editor@aazhipublishers.com

Editor
Aazhi Publishers
12, First Main Road
United India Colony
Kodambakkam
Chennai - 24