தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம்
தொகுப்பாசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா
கஞ்சை ப்ரகாஷ் என்றழைக்கப்படும் ஜி.எம்.எல். ப்ரகாஷ் நவீன இலக்கிய பிரம்மாக்கள் பலருடன் நேரடித் தொடர்பும் உலக இலக்கியங்களின் வாசிப்பனுபவமும் உள்ளவர். அங்கிள், மேபல், தஞ்சை ப்ரகாஷ் கதைகளுடன் கள்ளம், கரமுண்டார் வூடு, மீனின் சிறகுகள், மிஷன் தெரு நாவல்களும், கட்டுரைத் தொகுப்பொன்றும், சாகித்திய அகாதமிக்காக க.நா. சுப்ரமணியம் வாழ்க்கைச் சரிதமும், தொகுப்பாக வெளிவராத பல கவிதைகளும் தமிழுக்கு இவருடைய வங்களிப்பாகும். கதா, அக்னி, குமாரன் ஆசான் விருதுகள் வென்றவர். கதை சொல்லிகள், ஒளிவட்டம், கூடுசாலை, சும்மா இலக்கிய கும்பல், தளி உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளையும், பாலம், சாளரம், குயுத்தம், புனை, வெ. சா. எ. போன்ற பல இதழ்களையும் நடத்தியவர். தஞ்சையில் இவர் தொடங்கி நடத்திய யுவர்மெஸ் உணவகத்துக்குக்கூட இலக்கிய அந்தஸ்து உண்டு. 27.07.2000 அன்று மறைந்த தஞ்தை ப்ரகாஷ் இந்தியாவின் மாபெரும் வாய் வழிக்கதை சொல்லிகளுன் ஒருவர். இவர் எழுதியதைக் காட்டிலும் பிறருக்கு சொல்லி காற்றில் கரைந்தவை ஏராளம்.
Main menu
Book Categories
- Politics (1)
