தன் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் முடிவுகளையும் சந்தேகங்களையும் பரிசீலனைகளையும் ஆய்வுகளையும் 5000 பக்கக் காகிதங்களில், இடமிருந்து வலமாக, புதிர்ப் புதையலாக விட்டுச்சென்றுள்ளார் லியோனார்டோ. அறிவியல் பரிசீலனையாக, ஓவிய ஆலோசனையாக, இவை விரிந்து செல்கின்றன. பதிவுகளாக, கவிதைத் தெறிப்புகளாக, செறிவு வாசகங்களாக, கட்டுக்கதைகளாக, உருவக்க கதைகளாக, வேடிக்கைக் குறிப்புகளாக வடிவம் கொள்கின்றன.
அவரது கையெழுத்துப்படிகளுடன் கிடைக்கும் முழுமையுற்ற வரைபடங்கள் மட்டுமில்லாமல், அவற்றின் பூர்வாங்க வரைவுகளும் பரிசீலனைக் குறிப்புகளும் கிடைத்துள்ளன. இந்த மகத்தான அறிவியல், கலை, வரலாற்று, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகளிலிருந்து ஒரு சிறு பகுதிதான் இந்த நூல்.