ஞானக்கூத்தன்
ஞானக்கூத்தன் என்கிற அரங்கநாதன் 1938 அக்டோபர் 7ஆம் தேதி தஞ்சைப்பகுதி திருஇந்தளூரில் பிறந்தவர். 1952 இலிருந்து கவிதைகளை எழுதத் தொடங்கிய ஞானக்கூத்தனின் இளமைப் பருவ அரசியல் ஈடுபாடு தமிழ்நாடு மாநில சுயாட்சி, தமிழக எல்லை மீட்பு போராட்டங்களிலும் பொதுவுடைமை ஆதரவுச் செயல்பாடுகளிலும் இருந்தது.
1960 இல் திருமந்திரத்தைப் படித்த பாதிப்பில் ஞானக்கூத்தன் என்கிற புனைப் பெயரைச் சூடிக்கொண்டார். அறுபதுகளில் சி.சு.செல்லப்பா, க.நா.சு., சி. மணி, ந. முத்துசாமி, ஏ.கே. இராமானுஜன் போன்றோருடன் இணைந்து செயல்பட்டார். முதல் புதுக்கவிதைகள் நடை இதழில் வெளியாகத் தொடங்கின. எழுபதுகளில் க்ரியா எஸ். இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து கசடதபற இதழைத் தொடங்கினார். பிறகு ழ, கவனம் போன்ற இதழ்களின் பொறுப்புகளில் பங்கேற்றார். அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் பல கவிதை அரஙகுகளுக்குச் சென்றிருக்கிநார். ஞானக்கூத்தனின் தனித்தன்மை அவரது கவிதைகளின் தனித்தன்மை மட்டுமல்ல, தமிழ் மரபின் தொடர்ச்சியும் கூட.
ஞானக்கூத்தன் கவிஞர்களின் கவிஞர்.
Main menu
Book Categories
- Politics (1)
