செம்மூதாய்

ta
Price: Rs.100.00
Imprint: 
Aazhi
No of Pages: 
160

நியாகதியடைந்தோர் தரிசு நிலத்தில் பிரிய முடியாமல் மௌனம் காத்துவந்த வேளை பேய்களாய் அலைவுறும் மரித்தோரின் ஆவிகளை தன் துடிநாக்கு குலைவயிட அழைக்கிறான் தெந்தேரிநடிகன். கைவிடப்பட்ட நரங்களில் வேதனையாக துயிலும் பேய்களின் வாதையை பூமியில் உருவியகூந்தல் பிடித்துக் கேட்கிறாள் செம்மூதாய்.

துக்கத்தால் உப்பேறிப்போன பூமியில் தொலைந்துபோனவர்களுக்காக கல் மூடைகள் சுமந்து அலையும் உடலிகள். தைக்கப்பட்ட கண்களில் கசியும் எழுத்துக்களை பூமியெங்கும் பூசி ஜனனமுறும் பைத்திய மலரெடுத்து வனமின்றி நிலமின்றி அலையும் பெண்கள். பேய் பீடித்து சங்கிலியிட்டு சாட்டைத் தழும்புகளோடு அலையும் பெண்களின் துயர்பாடும் செம்மூதாய் வனந்திரியும் சலங்கைக் கால்களோடு மறைகிறாள் நாடக நிலத்தில்...