ருதுவனம்

ta
Price: Rs.60.00
ருதுவனம்
Imprint: 
Aazhi
No of Pages: 
88

இயற்கையின் ஊடான மனித போதம் தனது மொழியால் காட்சி உலகில் ஊடுருவும்போது உண்டாகும் தன்னிலை சிலிர்ப்புகளை வியந்து போற்றும் தாரா கணேசனின் கவிதைகள் ஓடும் நதி போல பல சுழிப்புகளுடன் நம்மை விரைவாகக் கடக்கின்றன. நினைவுக்கும் அ-நினைவுக்கும் இடையே தறியோட்டம் கொள்ளும் இம்மொழி தீர்க்கமான காமத்துக்கும் அதன் செவ்வியல் பண்புக்கும் இடையே நெகிழ்ந்து நிற்கும் அழகியலை ஒப்புக்கொடுக்கிறது. படிமச் சிக்கல்கள் ஏதுமற்ற, எளிய, நேரடி வாசிப்புக்கு ஆதரவான இக்கவிதைகள் சிலவற்றில் உடல் மொழியின் தீவிர உயிராற்றலையும் நாம் உணரலாம் - யவனிகா ஸ்ரீராம் -