சொல்லப்படாத கதைகளின் கதை முப்பத்தெட்டு சர்க்கங்களில்
தன் மனைவியின் கண் நோய்க்கான மருந்தைத் தேடி அதற்காகத்தான் செள்கிறோம் என்பதைத்த தெறிந்துகொள்ளாமலேயே கதைகளின் நிலத்திற்குப் பயணமாகிறான் ட்ரிஸ்ட்ராம். எழுதப்பட்ட வரிகளின் நடுவிருந்து மூதாதையர்களின் ஆவிகளை புலப்படுத்தத் தெரிந்த டவ்ளின் நகர நூலகர், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்ற சுல்தானிய ஒற்றான், இறந்தவர்களின் உடலிலிருந்து உருவங்களை மயாமாய் மறையச்செய்யும் களிம்பு தயாரிக்கும் இருநூறு வயது பூசாரி, இவர்களோடு அன்புசெய்வதைத் தவிர வேறெந்த வித்தையையும் கற்றுவைத்திராத ஒரு சேரிப் பெண் ஆகியோர் அவனுக்கு உதவுகிறார்கள்.