அழகிய பெரியவன்

ta

தொண்ணூறுகளில் எழுதத்தொடங்கியவர். இளம் தலைமுறை படைப்பாளிகளில் தமிழின் தவிர்க்கமுடியாத ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுகிறவர். கவிதை, கதை, நாவல், கட்டுரை என பல்வேறு தளத்திலும் இயங்குகிறவர். மக்களுக்காக களத்தில் நிற்பவர். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'தீட்டு' தமிழில் ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். 'தகப்பன் கொடி' நாவலுக்கு தமிழக அரசின் விருது பெற்றவர்.

இவரின் படைப்புகளில் இந்தியச் சமூகத்தின் ஒடுக்குமுறை ஆயுதங்களான சாதியாலும் மதத்தாலும் ஆணாதிக்கத்தாலும் குற்றுயிராக்கப்பட்டோரின் வாழ்க்கை எல்லா கூறுகளுடனும் பதிவாகியிருக்கிறது.