தமிழ்க்கொடி 2006 - ஆண்டுத் தொகுப்பு

ta
Price: Rs.200.00
தமிழ்க்கொடி 2006 - ஆண்டுத் தொகுப்பு
Imprint: 
Aazhi
No of Pages: 
328

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் ஆகிய இடங்களில் இருந்து 40 எழுத்தாளர்களின் பங்கேற்புடன்...

அரசியல், சமூகம், பண்பாடு, புலம்பெயர் வாழ்க்கை, பொருளாதாரம், கலை, இலக்கியம், ஊடகம் என விரிந்த பரப்பில்...

2006 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளையும் போக்குகளையும் ஆழமாகவும், விரிவாகவும் அலசும் / பிரதிபரிக்கும் கட்டுரைகளும் நேர்காணல்களும்...

கட்டுரைகள்/நேர்காணல்களிலிருந்து...
1.நோக்கம் எதுவாயினும் வழிமுறைகள் அறம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்கிற மகாத்மா காந்தியின் சிந்தனைகளை உலகம் மட்டுமின்றி இந்தியாவும் கைவிட்டுவிட்டதா? அறத்தின் காலம் முடிந்துவிட்டதா? - அ.மார்க்ஸ்
2.பெரியாரைப் பொறுத்தவரை அறிதல் என்பது தற்செயலாகவோ, இயல்பாகவோ நிகழும் அனுபவம் அல்ல. - வ.கீதா
3.பிரச்சினைகளின் அடிப்படையில் கூட பெண்கள் அனைவரும் ஒன்று சேருவதில்லை. சாதி என்று வரும்போது பிரிவினைகள் இருக்கிறது. - பாமா
4.சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண்விடுதலை இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல். மொழியை மட்டுமே காப்பாற்றுவது என்பது எந்த விதத்தில் உத்வும் என்று கேள்வி கேடாடாக வேண்டியிருக்கிறது. - சுப.பீரபாண்டியன்
5.அம்பேத்கருடைய கருத்தாக்கங்களில் இன்று மிகவும் பொருத்தாமாக இருப்பது அவர் சொன்ன அரசியல் ரெபும்பான்மை. வகுப்புவாத பெரும்பான்மை குறித்த கருத்துகள். அதை வளர்த்தெடுக்க வேண்டியதுதான் இன்று இருக்கிற அம்பேத்கரியவாதிகளின் கடமை. - ரவிக்குமார்
6.அவலத்தையும், கோபத்தையும், ஆத்திரத்தையும் சதாரம் இல்லாமல் மொழியின் வழியே இடமாற்றம் செய்யும் திராணியை தலித் உரைநடையால் இன்று தமிழ் பெற்றிருக்கிறது. - அழகிய பெரியவன்
7.வரலாறையும் நிகழ்கால்த்தையும் அறிந்தவர்கள் எவரும் ஆங்கலத்தையோ இதர உலக மொழிகளையோ புறக்கணிக்கச் சொல்லமாட்டார்கள். அதே சமயத்தில், இளம் வயதில் தாய்மொழியே பயிற்று மொழியாய் இருப்பது முக்கியம். - காஞ்சனா தாமோதரன்
8.இலங்கைத் தமிழர்கள் இலங்கையை விட்டுப் பெருமளவில் வெளியே சென்றால் தமிழ்ச் சமூக கட்டமைப்பு சீரழியும் என எதிர்பார்த்தார்கள். கால் நூற்றாண்டு கழிந்த நிலையில் அவர்களின் எதிர் பார்ப்பு தலைகீழ் மாற்றத்தைக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். - கி.பி.அரவிந்தன்
9.எல்லாவிதமான நாவல்களையும் ஒரே விதமான நடையில் ஒரேவிதமான மொழியில் வெளிப்படுத்தி விமரிசிப்பதால் சிறு பத்திரிகை வாசகர்களுக்கு எரிச்சலை உருவாக்குபவையாக அவை அமைந்து விடுகின்றன. - அ.சதீஷ்
10.தமிழக்க கலைச் சூழல் புதியதோர் உத்வேகம் பெற்றிருக்கிற போதிலும் பார்வையாளர்களிடம் எவ்வித சலனமும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. அறியப்படாத, புதிரான பிரதேசமாகவே இருந்து வருகிறது. அழகியல் அனுபவத்தின் முக்கியத்துவம் உணரப்படாமல் இருப்பது அவலமானது. - சி.மோகன்
11.இந்த விஷயங்களை நடைமுறைப்படுத்தலாம் என நினைக்கையில் அடுத்துவரும் கேள்வி இதன் தய்யாரிப்பாள் யார்? நாம் தான். நன்றாகத் திட்டமிடுகிற ஒரு பதினைந்து நிமடக் குறும்படத்தை பத்தாயிரம் ரூபாய்க்குள் எடுத்துவிட முடியும். 90 நிமிடப்படத்தை அதிகபட்சம் இரண்டு லட்சங்களுக்குள் வீடியோவிலும், இருபதிலிருந்து முப்பது லட்சங்களுக்குள் படச்சுருளிலும் எடுத்துவிட முடியும். - செழியன்