நல்ல வாழ்வு, நல்ல மரணம்

ta
Price: Rs.120.00
நல்ல வாழ்வு, நல்ல மரணம்
Imprint: 
Aazhi
ISBN: 
9789380244143
No of Pages: 
240

மனத்தின் உள்ளாழங்களில் நிகழும் மர்மங்களைத் திறந்து காட்டும் விளக்கங்களுக்கும் மரணத்தில் நிகழ்பவற்றை முன்னரே வாழ்க்கைப் பயிற்சிகளில் ஆழ்ந்து தியானித்திருந்து அதன் மூலம் உண்மையில் மரணம் நேரும்போது எவ்வாறு குறிக்கோளாகிய விமோச்சனம் அடைவதைத் துறிதப்படுத்துவது அல்லது விரைவுபடுத்துவது என்று காட்டும் யோக தந்திரப் போதனைகளுக்கும் திபெத்திய பௌத்தம் புகழ் பெற்றதாகும். இந்தத் துறைகளில் அதன் போகனைகள் வேறெந்த மரபிலும் காணப்படாத தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும். பௌத்தத்தைச் சேர்ந்த யோகிகன் பலர் தங்களது அதீதத் தியானப் பயிற்சிகளின் மூலம் பெற்ற உயர் ஞானக்காட்சிகளில் நிகழ்வதைப் பற்றியும் அறியும் திறன் பெற்றிருந்தார்கள். குறிப்பாக திபெத்தின் வஜ்ஜிரயான பௌத்தத்தில் மரணத்தைப் பற்றியும் மரணத்தில் நிகழ்வதைப் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து அந்த அறிவை உபயோகித்து எவ்வாறு உன்னதக் குறிக்கோளாகிய விமோச்சனம் அல்லது புத்தப்பேறு பெறுவதை விரைவுபடுத்துவது, அல்லது எவ்வாறு அடுத்த பிறவியில் நல்ல வாழ்க்கை நிலையையடைவது என்பது விரிவாக விளக்கிக்காட்டப்பட்டுள்ளது. இதனை தமக்கே உரிய பாணியில் தமாய் லாமா அவர்கள், அனைவரும் நடைமுறையில் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கிக் கூறியுள்ளார். அனைவரது ஆன்மீக வளர்ச்சிக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆங்கிலத்தில் இந்த நூல் (Advice on Dying: And Living a Better Life) ஏற்கனவே மிகப்பிரசித்தி பெற்றதாகும். இதைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் கூறும் நல்லுலகத்துக்குச் சமர்ப்பித்திருக்கிறார் ஒ.ராந. கிருஷ்ணன்.

Advice on Dying: And Living a Better Life நூலின் தமிழாக்கம்