எங்களைப் பற்றி
பெருங்கடல் என்கிற பொருளைக் கொண்ட ஆழி தமிழ்ப் பதிப்புலகில் மாபெரும் அலைகளை உருவாக்கியவாறே உருவானது. ஆழி பப்ளிஷர்ஸ் தொடங்கிய மூன்றாண்டுகளில் தமிழகமெங்கும், தமிழ் கூறு நல்லுலகமெங்கும் தனது பரப்பை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. 2007 ஜனவரியில் ஒரு புத்தகத்தோடு தொடங்கிய பயணம், இப்போது சுமார் 70 புத்தகங்களோடு மெதுவாக என்றாலும் உறுதியாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆழி தற்போது மூன்று பதிப்புப் பெயர்களில் தமது வெளியீடுகளை கொண்டுவருகிறது.
- ஆழி பப்ளிஷர்ஸ் என்ற பெயரிலேயே வரும் நூல்கள் இலக்கியம், கலை, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், வரலாறு, வாழ்க்கை வரலாறு போன்ற அடிப்படையான துறைகளைச் சார்ந்தவை.
- ஓஷியோ புக்ஸ் என்ற பதிப்புப் பெயரில் வெளிவரும் நூல்கள் பெரும்பாலும் தனிநபர் வளர்ச்சி, தொழில், வணிகம், குடும்ப நலன், ஆரோக்கியம், சுயமுன்னேற்றம் போன்ற வெகுஜன தலைப்புகள்.
- பேப்பர் போட் புக்ஸ் என்ற பதிப்புப் பெயரில் வெளிவரும் நூல்கள் குழந்தைகளுக்கும் பதின்வயதினருக்குமானவை. கதைகள், பாட்டுகள், அறிவியல் நூல்கள், வரலாறு, வாழ்க்கை வரலாறு தொடர்புடைய நூல்கள், அறிவுத்திறனையும் மொழித்திறனையும் வளர்க்கும் நூல்கள் என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் காத்திருக்கின்றன அவர்களுக்காக.
பதிப்புத்துறை, ஊடகம், மொழிபெயர்ப்பு, நுண்கலை என பல துறைகளில் அனுபவம் பெற்றோரின் சங்கமமாக விளங்குகிறது ஆழி. அதன் விளைவாக அதன் தேர்வுகளும் படைப்புகளும் சிறப்பானவையாக விளங்குகின்றன. எதை வேண்டுமானாலும் அச்சடித்து விற்றுத்தள்ளிவிடலாம் என்கிற மோசமான போக்கு நிலவும் இன்றைய மாயாஜால தமிழ்ப் புத்தகச் சந்தையில் நூலின் தரத்தை அதன் உருவத்தில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் உறுதிச்செய்யும் நிறுவனமே ஆழி.
சிறந்த எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஆழி எப்போதும் வரவேற்கிறது.
மேலதிக விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
Book Categories
- வாழ்க்கை வரலாறு (3)
- Economy and Business (1)
- சுற்றுச்சுழல் (1)
- கதை (6)
- வரலாறு (1)
- சட்டம் (1)
- நாவல் (4)
- மற்றவை (17)
- கவிதை (12)
- அரசியல் (6)
- அறிவியல் (3)
- திரைக்கதை (1)
- சுயமுன்னேற்றம் (1)
- சிறுகதை (1)
- சமூகம் (3)
