ஞானக்கூத்தன் என்கிற அரங்கநாதன் 1938 அக்டோபர் 7ஆம் தேதி தஞ்சைப்பகுதி திருஇந்தளூரில் பிறந்தவர். 1952 இலிருந்து கவிதைகளை எழுதத் தொடங்கிய ஞானக்கூத்தனின் இளமைப் பருவ அரசியல் ஈடுபாடு தமிழ்நாடு மாநில சுயாட்சி, தமிழக எல்லை மீட்பு போராட்டங்களிலும் பொதுவுடைமை ஆதரவுச் செயல்பாடுகளிலும் இருந்தது.
சிவகங்கை மாவட்டம் - நாட்டரசன்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்நகவர் கவிஞர் அய்யப்பமாதவன்.
மாராவின் அன்னம் பதிப்பகத்தின் மூலம் தீயின் பிணம் என்ற முதல் ஹைகூ கவிதை நூலையும் அதன் பிறகு மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வைறொருவன், நீர்வெளி, பிறகொருநாள் கோடை ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டார். காலச்சுவடு, பதிப்பகம் எஸ். புல்லட் என்ற கவிதை நூலை 2008இல் வெளியிட்டது.
ஆழி பதிப்பகத்தின் வெளியீடாக நிசி அகவல் என்ற இந்த கவிதை நூல் வெளிவந்திருக்கிறது.
சீனுராமசாமி என்கின்ற சீனிவாசன் மதுரை மேலமாசி வீதியிலும், திருநகர், திருப்பரங்குன்றம் மலைப்பாறை அடிவாரங்களிலும் மதுரை சூழ்ந்த வறட்சியும், பசுமையும் கூடி வாழ்ந்தவர். பதஞ்சலி எனும் புனைப்பெயரில் கணையாழி சிற்றிதழில் முதல் கவிதை. தொடர்ந்து நவீன கலை இலக்கியத்தில் காத்திரமாக சக கலைஞர்களுடன் பழகிப் பங்கேற்று தற்போது கொணர்ந்துள்ள முதல் கவிதை நூல் இது. 2007-ல் கூடல்நகர் எனும் முழுநீளத் திரைப்படம் இயக்கியவர். தொழிலியல் ஆவணப்படங்கள், சுற்று சூழலியல் ஆவணப்படங்கள், வர்த்தக விளம்பரப் படங்கள் எனவும் இயக்குபவர்.
திரு. இரா. செழியன் திராவிட இயக்கத்தின் மூத்தத் தலைவர்களில் ஒருவர். இந்தியாவின் தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் மிக முக்கியமானவர். செழியன் 1923 ஆம் ஆண்டு எப்ரல் 28 ஆம் நாள், தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், திரு. வி.எஸ். இராஜகோபால் அவர்களுக்கும் திருமதி. மீனாட்சிசுந்தரம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பட்டுக்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்து, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலைக் கல்வியை முடித்தார். அறிஞர் அண்ணாவுக்கு நெருக்கமான செழியன், 1949 இல் தி.மு.கழகத்தை உருவாக்குவதில் முக்கிய yங்கு வகித்தார்.
மதுரையில் பிறந்த பா. வெங்கடேசன் தற்போது ஓசூரில் தனியார் நிறுவனமொன்றின் நிதிப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். 1988லிருந்து எழுதத் துவங்கி இதுவரை இன்னும் சில வீடுகள், எட்டிப் பார்க்கும் கடவுள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளையும் ஒரிஜினல் நியூஸ்ரீல் சிறுகதைகள் என்கிற ஒரு சிறுகதை தொகுப்பையும், ராஜன் மகள் என்கிற சிறுநாவல்கள் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
சொந்த ஊர் இராமநாதபுரம். சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் முடித்தார்.
1989ல் இந்தியா டுடை தமிழ் பதிப்பில் ப்ரூப் ரீடர் பணியில் சேர்ந்தார். பத்து வருடங்கள் பணிபுரிந்து டெபுடி காப்பி எடிட்டரான பிறகு 2000ல் தமிழ் டாட்காம் என்கிற மின் இதழின் எடிட்டர் இன் சீஃப் பணியில் சேர்ந்தார்.
பிறகு 2001ல் மீண்டும் இந்தியா டுடே இதழில் இதழாசிரியர் பொறுப்பில் சேர்ந்தார். தற்போது இந்தியா டுடே இதழின் எக்ஸிகியூட்டிவ் எடிட்டராக பணிபுரிகிறார்.
ரிச்சர்டு எம். ஸ்டால்மன் - முற்றிலும் கட்டற்ற மென்பொருள்களால் ஆன இயங்கு தளத்தினை உருவாக்குவதற்காக 1984 இல் குனு (GNU) திட்டத்தைத் துவக்கியவர் நிரலாக்க உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவிகளான GNU Emacs, GNU C Compiler, GNU Debugger (GDB) உள்ளிட்ட மெனபொருள்களின் முதன்மை ஆசிரியர். தலைசிறந்த நிரலாளர். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளெயின் (http://fsf.org) தலைவர். கட்டற்ற மென்பொருள், காபிலெப்ட் முதலிய கருத்தாக்கங்களுக்கு வித்திட்டவர்.