பெருந்தாழி

ta
விலை:Rs.100.00
பெருந்தாழி
ஆசிரியர்: 
ம. தவசி
வெளியீடு: 
Aazhi
மொத்த பக்கங்கள்: 
176

தமிழில் இளநிலை ஆய்வு பட்டம் பெற்ற முதுகுளத்தூர், இளம்செம்பூர் ம.தவசி தற்போது வேலை பார்ப்பது புதுச்சேரி தமிழ் முரசு நாளிதழில்.

ராமநாதபுரத்து பகுதி மக்களின் வாழ்வும் மொழியும் வாய்மொழிக் கதைகளும் அவரிகளுத வீடுகளிலும் தெருக்களிலும் ஓடிய பேய்களும் கடவுள்களும் மாயக்கோல் சுழற்றும் மாந்திரீகப் புனைவுகளும் கதைகளெங்கும் அலைந்து திரிகின்றன.

ஆயிரம் மாற்றங்கள் நிழ்ந்தும் உள்நாட்டிலேயே சதா புலம் பெயர்ந்தபடி இருக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் தலித்துகளின் அகலா நெடுந்துயரின் கேவல்களும் கேட்டபடியே இருக்கிறது.

தமிழ் கதைப்பரப்பில் புதிய களன்களில் இயங்கும் கதைகளைச் சொல்லும் இப் 'பெருந்தாழி' ஏற்கனவே 'பனைவிருட்சி', 'ஊர்களில் அரவாணி' போன்ற கதைத் தொகுதிகளையும் 'உள்வெளி' என்ற கவிதை தொகுதியையும் வெளியிட்டுள்ள ம.தவசியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு இது.

-ரவிசுப்ரமணியன்