எம்.ஜி.ஆர். பேட்டிகள் என்ற நூலின் சுருக்கப்பட்ட இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. நடிகராக புகழின் உச்சியில் இருந்த காலம் முதல் முதலமைச்சராக கோலோச்சிய காலம் வரை பல்வேறு தருணங்களில் எம்.ஜி.ஆர் அளித்த பேட்டிகளும், பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதரின் மனத்தை அவரது வார்த்தைகளிலேயே அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இப்புத்தகம் அமைந்துள்ளது. பத்திரிகையாளர் எஸ். கிருபாகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடித்தேடி சேர்த்த அரிய பேட்டிகளின் தொகுப்பு.
பேரினவாதம், இனத் துரோகம், வல்லரசுகளின் ராஜதந்திர சதிகள்... உலகமே சேர்ந்து தோற்கடித்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில், மாதங்களில், நாட்களில் நடந்தது என்ன? ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த நூல்...
ஆனந்த் நடராஜனின் எசப்பாட்டுக் கட்டுரைகளைத் தனித்தனியாகப் படித்தபோது அவை எல்லா ஆசிரியர்களும் அந்தந்த நேரத்துக்கு எழுதும் தலையங்கங்களாகத் தோன்றியது. ஆனால் ஒருசேரப் படிக்கும்போதுதான் பக்குவம் வாய்ந்த, நீடித்த சமூக அக்கறை கொண்ட ஒரு சிந்தனையாளனை இவை அடையாளம் காட்டுகின்றன - அசோகமித்திரன், அணிந்துரையில் இருந்து...
சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, ரத்தமும் ரணங்களுமான காஷ்மீர் வரலாற்றை மிகவும் விரிவாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றியவரும் வணிக இதழியலில் தடம் பதித்தவருமான சந்திரன். காஷ்மீர் மக்களின் சிதைந்த கனவுகளையும் காஷ்மீர் பிரச்னையில் இந்தியா, பாகிஸ்தான், போராளிகள் என மூன்று தரப்பினரும் ஆடும் ஆடு புலி ஆட்டத்தையும் ஆதாரபூர்வமாக விவரிக்கிறார்.