ஆழி

நளிர்
ரமேஷ் கோபாலகிருஷ்ணன் (நாகார்ஜூனன்)
528
நீ உன் மீதே நின்று கொண்டிரு
க. முத்துக்கிருஷ்ணன்
64
ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்
சீனுராமசாமி
48
காஷ்மீர்
சந்திரன்
400
பேயோன் 1000
பேயோன்
128
ரஷோமான்
அகிரா குரோசவா
தி.சு.சதாசிவம்
152
இந்திரன் காலம்
இந்திரன்
176

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

கவிதை

கனவுகளைப் பேச வந்தவன்

வகை
ரூ. 40.00
ஆசிரியர்: 
ஜோசப் டி சாமி
வெளியீடு: 
Aazhi
ரூ. 40.00
பக்கங்கள்: 
80

ஜேடியின் கவிதைகள் அகவயப் புறவயக் கோட்பாடுகளை உடைத்தெறிகின்றன. மன இருக்கத்தை விலக்கிக்கொண்டு தன் வாகில் அவை மெல்ல நகரவும் செய்கின்றன. இவற்றுள் அனைத்து ஜீவ ராசிகளையும் மனித வாழ்க்கையின் அவலங்களையும் அவரால் எளிதில் சொல்லிவிடமுடிகிறது.

இரவுகளில் பொழியும் துயரப்பனி

வகை
ரூ. 70.00
ஆசிரியர்: 
தமிழ்நதி
வெளியீடு: 
Aazhi
ரூ. 70.00
ISBN: 
9789380244150
பக்கங்கள்: 
104
இரவுகளில் பொழியும் துயரப்பனி

''இந்த ஆண்டு (2009) ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் சபிக்கப்பட்ட ஒன்றாயிருக்கிறது. எதனாலும் எவராலும் இட்டு நிரப்பப்பட முடியாத இழப்புகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். கனவிலும் அசாத்தியம் என்று எண்ணிய கசப்பான பின்னடைவை தமிழீழ விடுதலைப் போராட்டம் வந்தடைந்திருக்கிறது. உன்னதங்கள் மீதான நம்பிக்கை கொஞ்சம் ஆட்டங்கண்டிருக்கிறது. விடுதலை குறித்த எங்களது கனவை, இலங்கைப் பேரினவாத அரசுடன் இணைந்த பல நாடுகளின் கூட்டுச்சதி உருத்தெரியாமல் சிதறடித்துவிட்டது. கிளறும் இடங்களில் எல்லாம் பிணங்களோ எலும்புக்கூடுகளோ தட்டுப்படும் அளவிற்கு வன்னி ஒரு பெரிய இடுகாடாக மாறிவிட்டிருக்கிறது.

நீ உன் மீதே நின்று கொண்டிரு

வகை
ரூ. 40.00
வெளியீடு: 
Aazhi
ரூ. 40.00
பக்கங்கள்: 
64
நீ உன் மீதே நின்று கொண்டிரு

புலரியின் நிர்மால்யத்திலிருந்து வைகறையின் இளவெயில் வரை..... அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகள். "ஒரு சொல்லின் தீயை ஒரு சொல்லாலேயே அணைக்கிறார். ஒரு சொல்லை நிகழ்த்து மேடைக்கு அனுப்பி, அதே சொல்லுடன் மேடைக்கு எதிரில் அமர்ந்து ரசிக்கிறார். எதைக் கண்டு பிடிக்கிறாரோ அதை ஒளித்து வைக்கிற முன்விளையாட்டு அவருக்குப் பிடிக்கிறது. உண்மையிடமிருந்து பொய்யையும், பொய்யிலிருந்து உண்மையையும் கற்று, கற்றதையே உண்மைக்கும் பொய்க்கும் கற்பிக்க முற்படுகிறார். உரித்துப் பார்த்துக் கொண்டே போய் ஒன்றுமில்லை என்பதைக் கண்டறிவது அவருக்குப் பிடிக்கிறது. ஏனெனில் ஒன்றுமில்லை என்பதே அவருக்கு எல்லாமாக இருக்கிறது.

தோற்றுப்போனவர்களின் பாடல்

வகை
ரூ. 70.00
ஆசிரியர்: 
வ.ஐ.ச.ஜெயபாலன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 70.00
பக்கங்கள்: 
104
தோற்றுப்போனவர்களின் பாடல்கள்

யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. ''அம்மாவின் பாடல்களை காலத்தில் எழுதுகிறேன்'' என்ற இவரின் பிரகடனமும் காலம் துயரெரித்து அம்மாவை தின்றது என்ற சோகமும் ‘தோற்றுப் போனவர்களின் பாடல்கள்’ கவிதைகளின் முதன்மையான உணர்வுகள் என்பதை உணர முடிகிறது.

மேன்ஷன் கவிதைகள்

வகை
ரூ. 40.00
ஆசிரியர்: 
பவுத்த அய்யனார்
வெளியீடு: 
Aazhi
ரூ. 40.00
பக்கங்கள்: 
64
மேன்ஷன் கவிதைகள்

பவுத்த அய்யனாருக்கு மேன்ஷன் சில கவிதைகளைச் சொல்லியிருக்கிறது. ஒரு குழந்தையின் காட்சிப்புலன் உணர்வோடு உலகத்தைப் பார்க்கிறார் பவுத்த அய்யனார். குழந்தைகள் எதையும் மிகுத்துப் பார்ப்பதும் இல்லை குறைத்துப் பார்ப்பதும் இல்லை. ஆனால் மனித இயல்புக்கே உரிய முறையில் புனைவின் தன்மையோடு பார்க்கின்றது. உங்கள் மனசுக்குள் நீர்த்துப்போய்க் கிடக்கும் கழிவிரக்கத்தைத் தொட்டு, உங்களை உங்களுக்குக் கூசவைக்கிற கவிதைகள்.
- பிரபஞ்சன்,  முன்னுரையில்...

உனக்கும் எனக்குமான சொல்

வகை
ரூ. 100.00
ஆசிரியர்: 
அழகிய பெரியவன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 100.00
ISBN: 
978-81-907523-4-3
பக்கங்கள்: 
200
உனக்கும் எனக்குமான சொல்

அழகிய பெரியவனின், நீ நிகழ்ந்த போது, அரூப நஞ்சு ஆகிய தொகுப்புகளின் கவிதைகளையும், அண்மைக் கவிதைகளையும் சேர்த்த இது வரையிலான முழு கவிதைகளின் தொகுப்பு.

ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்

வகை
ரூ. 40.00
ஆசிரியர்: 
சீனுராமசாமி
வெளியீடு: 
Aazhi
ரூ. 40.00
பக்கங்கள்: 
48
ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்

இக்கவிதை நூலில் மண்ணின் மரபார்ந்த தொன்மங்களைக் காப்பதிலும் நகரமயமாக்க இயற்கை - எதிர் கலாச்சாரங்களால் ஏற்படும் பாதிப்புகளை சஞ்சலங்களை பதிவு செய்வதிலும் கவிதையை தன்னியல்பின் ஜீவரசம் தொனிய எழுதியிருக்கிறார். இந்த தொகுப்பின் மூலம் முளைக்க விரும்பும் விதை மண்ணுக்குள் காத்திருப்பது போல இதுநாள் வரை சீனுராமசாமிக்குள்ளிருந்த கவிஞனின் படைப்புக் காலத் தூக்கம் கலைந்திருக்கிறது என்கிறார் செழியன்.

ஊழிக்குப் பின்

வகை
ரூ. 50.00
ஆசிரியர்: 
ஆர்தர் ரைமபோ
வெளியீடு: 
Aazhi
ரூ. 50.00
பக்கங்கள்: 
88

சாலை முகட்டில் வாகை மரத்தருகில் கையணைத்து முகத்திரை கூட்டி சற்றே உணர்ந்தேன் இவள் பேருடல். வைகறை. ஆங்கே குழவியோ ஆழ விழுந்தது வனத்தரையில். வாசித்த, சங்கக்கவிதை போலிருக்கிறதா? இது ஆர்தர் ரைம்போவின் கவிதை. ஃப்ரெஞ்சு மொழியின் நவீன கவிதை-யுகத்தைத் தொடங்கி வைத்த ஷார்ல் போதலேர் வழி சென்று அவரையும் மீறியவர் ரைம்போ. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃப்ரெஞ்சு வாழ்க்கையின் உள்ளும் வெளியுமாகப் பல திணைப்பரப்புக்களைக் கடந்தவர்கள் இவர்கள் இருவரும். ஃப்ரெஞ்சு மொழியின் அகமும் புறமும் புதிதாகப் படைத்தவர்கள், பித்த நிலையில் இயங்கியவர்கள்.

ருதுவனம்

வகை
ரூ. 60.00
ஆசிரியர்: 
தாரா கணேசன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 60.00
பக்கங்கள்: 
88
ருதுவனம்

இயற்கையின் ஊடான மனித போதம்
தனது மொழியால் காட்சி உலகில்
ஊடுருவும்போது உண்டாகும்
தன்னிலை சிலிர்ப்புகளை
வியந்து போற்றும் தாரா கணேசனின்
கவிதைகள் ஓடும் நதி போல பல சுழிப்புகளுடன்
நம்மை விரைவாகக் கடக்கின்றன.

நினைவுக்கும் அ-நினைவுக்கும் இடையே
தறியோட்டம் கொள்ளும் இம்மொழி
தீர்க்கமான காமத்துக்கும்
அதன் செவ்வியல் பண்புக்கும் இடையே
நெகிழ்ந்து நிற்கும் அழகியலை
ஒப்புக்கொடுக்கிறது.

படிமச் சிக்கல்கள் ஏதுமற்ற, எளிய,
நேரடி வாசிப்புக்கு ஆதரவான இக்கவிதைகள்
சிலவற்றில் உடல் மொழியின்
தீவிர உயிராற்றலையும் நாம் உணரலாம்

- யவனிகா ஸ்ரீராம் -

நிசி அகவல்

வகை
ரூ. 60.00
ஆசிரியர்: 
அய்யப்பமாதவன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 60.00
பக்கங்கள்: 
80
நிசி அகவல்

என்னை மீறிச்செல்லும் கவிதைகளை கட்டுப்படுத்தாமல் மமகையுடன் இருந்துகொண்டிருந்தேன். ஐன்து கவிதை நூலகள் வந்த பிறகுதான் உணர்ச்சி வேகத்துடன் எழுதப்பட்ட கவிதைகளில் வார்த்தைகள் அநாவசியமாக வந்திருப்பதை கண்டுகொண்டிருக்கிறேன். அதிகப்படியான தேவையற்ற வார்த்தைகளை கருணையற்று நீக்கிவிடும் இதயத்தை இருபது ஆண்டு கால கவிதை அனுபவத்திற்கு பிகுதான் பெற்றிருக்கிறேன்.