மனத்தின் உள்ளாழங்களில் நிகழும் மர்மங்களைத் திறந்து காட்டும் விளக்கங்களுக்கும் மரணத்தில் நிகழ்பவற்றை முன்னரே வாழ்க்கைப் பயிற்சிகளில் ஆழ்ந்து தியானித்திருந்து அதன் மூலம் உண்மையில் மரணம் நேரும்போது எவ்வாறு குறிக்கோளாகிய விமோச்சனம் அடைவதைத் துறிதப்படுத்துவது அல்லது விரைவுபடுத்துவது என்று காட்டும் யோக தந்திரப் போதனைகளுக்கும் திபெத்திய பௌத்தம் புகழ் பெற்றதாகும். இந்தத் துறைகளில் அதன் போகனைகள் வேறெந்த மரபிலும் காணப்படாத தனிச் சிறப்பு வாய்ந்தவையாகும்.